365 நாளும் அன்லிமிடட் தான்...! - ஜியோவின் புத்தாண்டு பரிசு

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 2020ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 6ம் தேதி மொபைல் கட்டணங்களில் அதிரடி விலை உயர்வை கொண்டுவந்த ஜியோ நிறுவனம் சிலநாட்களிலேயே அடுத்தடுத்து வாடிக்கையாளர்களை கவர தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகிறதுஅந்தவகையில் 2020ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
 
அதன்படி இலவச ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டட் காலிங் வசதிஅன்லிமிட்டட் எஸ்எம்எஸ்தினமும் 1.5 ஜிபி நெட் மற்றும் 12000 IUC நிமிடங்கள் போன்றவற்றை 365 நாட்களும் பெற ரூ. 2020 க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இது ஒட்டுமொத்த ரீசார்ஜ் கணக்கிலிருந்து ரூ. 179 குறைவாகும்மேலும் இந்த 365 நாட்களிலும் மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்க எவ்வித இடையூறும் இருக்காது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதுஜியோவின் இந்த புதிய அறிவிப்பு மற்ற நிறுவனங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளனஇதனால் விரைவில் மற்ற நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.