2 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், அதிக கனமழையும், சென்னை ,காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.




கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அக்.,1 முதல் இன்று (டிச.,1) வரை இயல்பை விட 3 செ.மீ., மழை அதிகமாக பதிவாகியுள்ளது. சூறைக்காற்று வீசுவதால் இன்று குமரி, லட்சத்தீவு, மாலத்தீவு கடல்பகுதிகளுக்கும், நாளை லட்சத்தீவு பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த மழை 5, 6 நாட்களுக்குள் குறையும், பின்னர் 10ம் தேதிக்கு பின் மழை அதிகரிக்கும். இவ்வாறு புவியரசன் கூறினார்.