ஆசிரியர்களின் குறைகள் என்ன? ஆராய பள்ளி கல்வி கமிஷனர் அழைப்பு

ஆசிரியர்கள் தொடர்பான குறைகளை கேட்கசங்க நிர்வாகிகளுக்குபள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் அழைப்பு விடுத்துள்ளார்.

விரைவில்குறை தீர் கூட்டம் நடக்க உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையில்ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேற்றப் படுகின்றனஅவற்றில் சில மாற்றங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும்சில மாற்றங்கள் குழப்பமானதாகவும் உள்ளனபாடத் திட்டம்தேர்வு முறைவிடை திருத்தம் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனஅவற்றில் சில பாராட்டையும்சில விமர்சனங்களையும் ஏற்படுத்தினஇந்நிலையில்நிர்வாக மாற்றத்தில் முக்கிய அங்கமாகபள்ளி கல்வி இயக்குனரகத்தில்புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது.முதல் கமிஷனராககேரளாவைச் சேர்ந்த பெண் ..எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார்இவர்டில்லியில்மத்திய அரசின், 'நிடி ஆயோக்அமைப்பின் இயக்குனராகவும்மத்திய நிதி அமைச்சக அதிகாரியாகவும்விருதுநகர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

பள்ளி கல்வியில் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள இவர்பள்ளி கல்வியின் நிர்வாகப் பணிகளை தெரிந்து கொள்ளவும்ஆசிரியர்கள் நியமனம்பள்ளிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்.ஆசிரியர் சங்கங்களின் குறைகளை கேட்கஅவர் முடிவு செய்துள்ளார்இதற்காகஆசிரியர் சங்க நிர்வாகிகளைஅண்ணா நுாலக அரங்கில்நாளை சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப் பட்டதுபல்வேறு நிர்வாக காரணங்களால் கூட்டம் தள்ளி வைக்கப் பட்டுள்ளதுகூட்டம் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவேபள்ளி கல்வி அமைச்சராக செங்கோட்டையனும்செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற போதுசென்னைதி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில்நள்ளிரவு, 2:00 மணி வரைஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்துகுறை கேட்டனர்.அவற்றில்பெரும்பாலான குறைகள் தற்போது வரை தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளதாகஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில்பள்ளி கல்வி கமிஷனர் குறை கேட்பதாவது தீர்க்கப்படுமா எனஆசிரியர் சங்க நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்)