ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்

சென்னை : ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றப் பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறு மாதம் தாமதமாக இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் படுகிறது.


நவ., 11ல் இந்த கவுன்சிலிங் துவங்கியது. அதற்கான கால அட்டவணையும் வெளியிடப் பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, கால அட்டவணையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங், இன்று நடத்தப்படுகிறது.முதுநிலை மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல், நாளை வழங்கப்படும். பிற மாவட்டங்களுக்கு, நாளை மறுநாள் இடமாறுதல் வழங்கப்படும். முதுநிலை மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, நவ., 16ல் பதவி உயர்வுகவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.