எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேபருவ பாடத்திட்டம்! பள்ளக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு 2013-ம் ஆண்டு முதல் முப்பருவ பாடமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு 2012-ம் ஆண்டு முதல் முப்பருவப் பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு 2013-ம் ஆண்டு முதல் முப்பருவ பாடமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படிதற்போது முதற்கட்டமாக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ( 2020-2021 ) முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரேபருவ பாடத்திட்டமாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் 8-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை ஒரே பாடத்திட்டமாக வடிவமைக்குமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு ( SCERT ) பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.