ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவி படிப்பு உதவி தொகை திட்டத்தில்
மாணவர்களை தேர்வு செய்வதற்கான திறனறி தேர்வு டிச.1ல் தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டைwww.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கான பயனாளர் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.