'பயோ பிளாஸ்டிக்' கண்டுபிடித்த பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தேர்வு

 'பயோ பிளாஸ்டிக்' கண்டுபிடித்த பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தேர்வு
தஞ்சாவூர்: 'பயோ பிளாஸ்டிக்'பொருளை கண்டுபிடித்த, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவி, தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.


'பிளாஸ்டிக்' பொருட்களால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மத்திய - மாநில அரசு தடை விதித்துஉள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், பாப்பநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், ப்ளஸ் 2 மாணவி அர்ச்சனா, 17, இயற்கை பொருட்களால், 'உயிரி நெகிழி' என்ற, பயோ பிளாஸ்டிக் பொருள் கண்டறிந்துள்ளார்.கடந்த வாரம், கரூரில் நடந்த, மாநில அளவிலான அறிவியல் போட்டியில், அர்ச்சனாவின், 'உயிரி நெகிழி' கண்டுபிடிப்பு முதலிடம் பிடித்ததுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''மாணவிக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். இந்த, பயோ பிளாஸ்டிக்கை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.28 நாட்களில் மக்கும்பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படும், உயிரி நெகிழி தயாரிப்பதற்கான செலவு, குறைவு தான். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, இந்த உயிரி நெகிழியால், பைகள், தட்டு, கப் உள்ளிட்டவை தயாரிக்கலாம். இயற்கையாக கிடைக்கும் சோள மாவு, வினிகர் ஆகியவற்றால்தயாரிக்கப்படும் உயிரி நெகிழி, 28 நாளில் மக்கும் தன்மை உடையது.