இலவச பஸ் பாஸ் பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: பள்ளிகளின் அலட்சியத்தால், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியில், தாமதம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளி மாணவர்களுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆண்டின் துவக்கத்தில், இந்த பாஸ் வழங்கப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு, காலதாமதம் ஏற்படுகிறது. மாணவர்களின் ரத்தப் பிரிவு, பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், பஸ் பாஸ் விண்ணப்பங்களில் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், இந்த விபரங்களை சேகரிக்காமல் விட்டதால், பஸ் பாஸ் வினியோகம்பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பெரும்பாலான பள்ளிகள், மாணவர்கள் விபரங்களை அனுப்பாமல் இருப்பதால், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில், மாணவர்களின் விபரங்களை விரைந்து தாக்கல் செய்து, இலவச பஸ் பாஸ் பெற்று, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில், காலதாமதம் செய்ய வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.