ஏன் சர்க்கரை நோய் வருகிறது


சர்க்கரை நோய் அறிகுறிகள் என்னென்ன...


பாதத்தில் எரிச்சல், மதமதப்பு ஏற்படுதல், கால் மரத்துப்போதல், இனம் புரியாத வலி , காலில் வீக்கம் உண்டாதல், நிறமாற்றம் ஏற்படுதல்.
யாருக்கு இந்த நோய் பாதிப்பு வரும்


யாருக்கும் வரலாம். மரபணுக்கள் ஆய்வின்படி ரத்தக்கொதிப்பு, பக்கவாதம், கொழுப்பு சத்து அதிகரிப்பதும் இந்த நோய் தாக்குதலுக்கு காரணம். பிறந்த குழந்தை 4.5 கிலோ எடை இருந்தால் கூட பாதிப்பு ஏற்படும். அதிக எடை உள்ளவர்களுக்கு இருக்க வாய்ப்புண்டு. ஸ்டிராய்டு மருந்து உட்கொள்பவர்கள், தோல் வியாதிகளுக்கு மருந்து எடுப்பவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு
ஏற்படும்.


இது பரம்பரை நோயா...


சர்க்கரை நோயின் 2வது வகை தாக்குதல் தாய், தந்தைக்கு இருந்தால் சந்ததியினருக்கு வரும். கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வருகிறது. பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.


சர்க்கரை கட்டுக்குள் இருப்பதற்கான அளவீடு என்ன... அதற்கு என்ன செய்ய வேண்டும்.


இரவு உணவுக்குப் பின் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் காலையில் வெறும் வயிற்றில் 7:00 மணிக்கு ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்தால் 120 எம்.ஜி.,க்குள் இருந்தாலும், காலை உணவுக்கு பின், 2 மணி நேரம் கழித்து 180 எம்.ஜி.,க்குள் இருந்தாலும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது எனலாம்.

மேலும் இரவு நேரங்களில் இனிப்பு சாப்பிட்டு பகலில் பரிசோதிக்கும் போது, அதிகமாகவும்,
இரவில் எதுவும் எடுக்காமல் பகலில் குறைவாகவும் காணப்படும் ஏற்றத்தாழ்வு அளவுகளில் சிலர் குழப்ப நிலையை அடையலாம். அதற்காக மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு
பரிசோதனை செய்து அது, 7 சதவீதத்திற்குள் இருந்தால் அதுவே சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும்.


இந்நோய் உள்ளவர்களுக்கு காலில் புண் ஏற்பட்டால், ஆறாமல் உள்ளதற்கான காரணம் என்ன...


சர்க்கரை நோய் பாதிப்பில் நரம்பு பாதிப்பு, திசுக்கள் பாதிப்பு என 2 வகை உண்டு. ரத்தத்தில்
சர்க்கரையின் அளவு கூடும்போது, நரம்பு பாதிப்பு ஏற்படும். இதனை 'நியூரோபதி அல்சர்' எனக்கூறுவர். இதனால் உணர்ச்சிகள் மரத்துப்போதல், அதிர்வுகளை உணரும் தன்மையை இழத்தல், வலி உணர்வு இல்லாமல் போதல் உள்ளிட்ட பாதிப்புக்கள் உண்டாகும்.

2 வதாக நம் உடலில் உள்ள தசைத்திறன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். அதாவது
'திசுபாதிப்பு'. இதனை 'வாஸ்குலர் அல்சர்' என்கிறோம். இதில் ரத்தக்கொதிப்பு, கெட்ட கொழுப்பினால் ரத்த ஓட்டப்பாதையில் பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாத பட்சத்தில், புண் ஏற்பட்டாலோ, நகம் வெட்டும்போது சிறு காயம் ஏற்பட்டாலோ
ஆறாமல் அப்படியே தொடரும். ஆனால் வலி இருப்பது இல்லை. சில நேரங்களில் பாதிப்பு அதிகமாகி நோயாளியின் கால்களையே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.


பாத இழப்புக்களை தவிர்க்க என்ன வழி...


நமக்கு ஏன் சர்க்கரை நோய் வருகிறது. வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் இல்லாததே நோயாளிகள் அதிகரிக்க காரணம். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நாம் கட்டுக்குள் வைத்திருந்தாலே 'வாஸ்குலர் அல்சர்' பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து விடலாம். நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு பின்பற்றினாலே 85 சதவீதம் பாத இழப்புக்களை தவிர்க்கலாம்.


என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்...


பாதத்தில் தொடு உணர்வு உள்ளதா என, 10 ஜி மோனோப்ளமெண்ட் பரிசோதனை கருவி மூலம் கண்டறியலாம். பயோதெசியோமெட்ரி பரிசோதனை கருவி மூலம் அதிர்வு உணர்வுகளில் பாதிப்பு உள்ள இடங்களில் பரிசோதனை செய்து கண்டறியலாம்.

'போடேஸ்கேன்' பரிசோதனையில் காலணிகளை பாதத்தில் போட்டு நடக்கும் போது பல
பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, திசுக்கள் தேய்ந்து, பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் அந்த பாதப்பகுதியில் குறிப்பிட்ட எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என கண்டறிந்து காலணிகளை தயார் செய்து, பாதிக்கப்பட்டவர்களை அதனை அணிந்து நடக்க செய்து பரிசோதனை
செய்யப்படும். இவற்றால் துல்லியமாக உடலில் சர்க்கரை பாதிப்பை கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை மேற்கொண்டால் நலம் பெறலாம்.


தொடர்ச்சியாக இன்சுலின் செலுத்தலாமா.
சர்க்கரையின் அளவு சில நேரங்களில் அதிகமாக குறையவும், எடை கூடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதுகுறித்து பயப்பட தேவையில்லை.

டாக்டர்

சி.பி.ராஜ்குமார்
சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்
தேனி

99944 70300