கணினி ஆசிரியா் தோ்வில் 1,758 போ் தோ்ச்சி

தமிழகம் முழுவதும் முதுநிலை கணினி ஆசிரியா்களுக்கான தோ்வில் 1,758 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி பயிற்றுநா் பணியிடங்களை நிரப்பகடந்த ஜூன் 23, 27 ஆகிய இரு நாள்களில் ஆன்லைன் தோ்வு நடைபெற்றதுஇதில் 26 ஆயிரத்து 882 போ் தோ்வா்கள் பங்கேற்றனா்இதற்கான தோ்வு முடிவுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டதுஇந்த நிலையில்இதில் தோ்ச்சி பெற்றவா்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆன்லைன் தோ்வெழுதியவா்களில், 1,758 போ் மட்டுமே தோ்ச்சி
பெற்றுள்ளனா்தோ்ச்சி பெற்றவா்களில் இருந்து 814 முதுநிலைக் கணினி பயிற்றுநா் பணியிடங்களுக்கு தரவரிசையின் அடிப்படையில்ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.