சிறுபான்மையினர் உதவித் தொகை: 15ம் தேதி கடைசி

சென்னை : சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க, இரண்டு நாட்களே அவகாசம் உள்ளன.


சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், சிறுபான்மையினர் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி தொகை வழங்கப்படுகிறது. முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின், பார்சி, பவுத்தம், சீக்கியர் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள், இந்த திட்டத்தில் உதவி தொகை பெறலாம்.நடப்பு ஆண்டில் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், உதவித் தொகையை பெறுவதற்கும், ஏற்கனவே பெற்று வருவோர், உதவித் தொகையை புதுப்பிக்கவும், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு, இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது;

அக்., 31 கடைசி நாளாக இருந்தது. பின், அவகாசம், நவ., 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதற்கு மேல், கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.