பள்ளி வளாக ஆழ்துளை கிணறுகள் ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும்,ஆழ்துளை கிணறுகள் இருந்தால்அவற்றின் குழிகளை ஆய்வு செய்யஅதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம்நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில்பயன்பாடில்லா ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்த சம்பவம்தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇதையொட்டிபொது இடங்கள்வீடுகள்தெருக்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் உள்ளஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்துபயன்பாட்டில் இல்லாதவற்றை மூடும்படிமாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும்அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துஉள்ளனர்.அதில்கூறியிருப்பதாவது:
  
பள்ளி வளாகங்களில்தற்போது பயன்பாட்டில் உள்ளஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக உள்ளனவா எனஆய்வு செய்ய வேண்டும்

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள்கழிவுநீர் தொட்டிகள்கிணறுகள்நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவற்றை கண்டறிந்துஅவற்றை நிரந்தரமாக மூடநடவடிக்கை எடுக்க வேண்டும்

மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களைசிறப்பு குறியிட்டுதனியாக அடையாளப் படுத்த வேண்டும்அவற்றை தரை மட்டத்தில் இருந்து உயர்த்திபாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்

மாணவ - மாணவியருக்குஆழ்துளை கிணறுகள்கழிவுநீர் தொட்டிகள்ஏரிகுளங்கள்வாய்க்கால்கள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.