பள்ளிகளுக்கு ஆயுத பூஜை விடுமுறை

சென்னை: தமிழக பள்ளிகளில், ஆயுத பூஜை விடுமுறை, இன்று துவங்குகிறது.


தமிழக பள்ளிகளில், செப்., 12 முதல், 23 வரை, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்தது. இதையடுத்து, ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை, நேற்று முன்தினம் முடிந்த நிலையில், அக்., 3ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தசரா பண்டிகைக்கான விடுமுறை, இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள், பள்ளி விடுமுறைக்குப் பின், மீண்டும், வரும், 9ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.