பள்ளி மாணவர்களுக்கு டெங்குவை தடுக்க இயக்குனரகம் உத்தரவு

சென்னை:டெங்கு பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதிகமாக கண்டறியப்பட்டுஉள்ளனர்.சுகாதார பணிடெங்கு பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள், பல்வேறு வகைகளில் உற்பத்தியாவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.சிமென்ட் தொட்டிகள், வாளிகள், கழிப்பறையில் திறந்திருக்கும் தண்ணீர் சேமிக்கும் உருளை, உடைந்த பாத்திரங்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கட்டட பணிகள் ஆகியவற்றின் வழியாக, கொசுக்கள் பரவுவது தெரிய வந்துள்ளது. எனவே, டெங்குவை தடுக்கும் வகையில், பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும், நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். கொசுக்கள் பரவும் வகையில் உள்ள, சிதிலமடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும். பள்ளிகளில் முறையான சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகளில் பள்ளி வளாகத்தை முழுவதுமாக துாய்மைப்படுத்தி, கட்டட கழிவுகள், தேங்கியிருக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.பள்ளிகளில் துாய்மை துாதர்களாக, மாணவர்களை நியமிக்க வேண்டும். சுகாதார துறை அதிகாரிகள் உதவியுடன், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, துாய்மை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பள்ளிகளின் கூரைகளில், கொசுக்கள் பரவும் அம்சங்கள் உள்ளதா என்று பார்த்து, அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி கூரைகளின் மேற்பகுதியை புகைப்படம் எடுத்து, அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். பரிசோதனைதுாய்மை குறித்த அறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தயாரித்து, அதை, வாரந்தோறும் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்களுக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைகளுக்கு சென்று, உடனடியாக பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்த வேண்டும்.டெங்கு, சிக்குன் - குனியா, மலேரியா மற்றும் வைரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை, பள்ளி ஆசிரியர்கள் வழியே, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.