மாணவர்களுக்கு அறிவுரை

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும், 27ம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை
கொண்டாடப் படுகிறது. இந்த மகிழ்ச்சியான பண்டிகையில் சிலர், கவன குறைவால், பட்டாசு வெடித்து விபத்தில் சிக்குகின்றனர். விபத்தில், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளிகளில், மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பான, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளி குறித்து, போட்டிகள் நடத்தி, பரிசு தரலாம். தீக்காயங்கள் ஏற்படாத வகையில், பட்டாசு வெடிப்பது குறித்து வழிகாட்ட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.