ஆசிரியர் பணி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. செப்., 27, 28 மற்றும், 29ம் தேதிகளில், இந்த தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 12 பாடங்களுக்கு மட்டும், அக்., 18ல் வெளியிடப்பட்டன. மீதமுள்ள, ஐந்து பாடங்களுக்கு, நேற்று முடிவுகள் வெளியாகின. டி.ஆர்.பி.,யின்,trb.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.