மாற்று திறனாளி சலுகை தேர்வு துறை அறிவிப்பு

சென்னை:'பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில், சலுகைகள் பெற விரும்பும், மாற்றுத் திறனாளி மாணவர்கள், வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கீடு, தேர்வு எழுதுவதற்கு உதவியாக, 'ஸ்கிரைப்' என்ற, உதவி ஆசிரியர்கள் நியமனம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகளை பெறுவதற்கு, மாற்று திறனாளி மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன், பள்ளிகள் வழியாக, அரசு தேர்வுத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் சலுகை பெற விரும்பும் மாணவர்கள், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை நகல் அல்லது மருத்துவரின் பரிந்துரை கடிதத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தலைமையாசிரியரிடம் வழங்க வேண்டும். மேலும், 10ம் வகுப்பில், அரசு பொதுத்தேர்வு எழுத சலுகை பெற்றதற்கான ஆவணங்களையும் வழங்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் பெற்று, வரும் 31க்குள், தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும் என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.