சித்தா பட்ட மேற்படிப்பில் சேர வாய்ப்பு

சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, சித்தா பட்ட மேற்படிப்புக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


சென்னை அரும்பாக்கம் மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்தா மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா பட்ட மேற்படிப்புக்கு, 80 இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'செயலர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம், அண்ணா இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 106' என்ற முகவரிக்கு, வரும், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.