90% தள்ளுபடியா..? மீண்டும் 5 நாட்கள் ஆஃபர் மழை பொழியும் அமேசான்..!

கடந்த 29 செப்டம்பர் 2019 முதல் 04 அக்டோபர் 2019 வரை அமேசானின் திருவிழா கால தள்ளுபடி விற்பனை நடந்தது. இணையம் முழுக்க Amazon Great Indian Festival sale என தேடித் திரிந்தார்கள் நெட்டிசன்கள். அமேசானின் இந்த பண்டிகை கால விற்பனை முயற்சியால் பிரம்மாண்ட பலன்கள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த 7 நாட்களில் தசரா மற்றும் நவ ராத்திரி பண்டிகையை குறி வைத்து விற்பனையில் ஒரு கலக்கு கலக்கிய அமேசான், இப்போது தீபாவளிப் பண்டிகையை குறி வைத்து அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17 வரை மீண்டும் களம் இறங்க இருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ..!தொடக்கம் அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனையில் ஐசிஐசிஐ வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட்களைப் பயன்படுத்தினால் 10 % உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

அமேசானின் இந்த இரண்டாவது பண்டிகை கால விற்பனை அக்டோபர் 13-ம் தேதி அதி காலை 12.01-க்கு தொடங்குகிறது. ஆனால் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள், அக்டோபர் 12, 2019 அன்று மதியம் 12.00 மணியில் இருந்தே வாங்கத் தொடங்கலாம்.அமேஸானின் இந்த பண்டிகை கால விற்பனையில் பெண்களுக்கான புடவை, காலணிகள், கைக் கடிகாரங்கள், சுடிதார் டாப்புகள், புதிய ஆடைகள் என பலவும் சுமார் 90% தள்ளுபடியில் கொடுக்க இருக்கிறார்களாம்.
இதில் பல முன்னணி பிராண்டெட் ஆடைகளும் அடக்கம் என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஆக இந்த முறை, நம் வீட்டுப் பெண்களுக்கு ஜாக்பாட் தானே..!எலெக்ட்ரானிக் சாதனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் சுமார் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் கொடுக்கப் போகிறார்களாம். இந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்க இருப்பது போல அசரடிக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், நோ காஸ்ட் எம் வசதி என பல வசதிகளை களம் இறக்க இருக்கிறார்களாம்.
குறிப்பாக இலவச டெலிவரி, இலவச இன்ஸ்டாலேஷன் வரை செய்து கொடுக்க இருக்கிறார்களாம்.இந்த பண்டிகை கால விற்பனையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பிராண்ட் பொருட்களுக்கு சுமாராக 6,000 டீல்களைக் கொண்டு வரப் போகிறார்களாம். அதோடு 30,000-க்கும் மேற்பட்ட, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்க இருக்கிறார்களாம். குறிப்பாக அமேசான் பிராண்ட் பொருட்களுக்கு சுமாராக 80 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்க இருக்கிறார்களாம்.