அக்., 20ல் துவங்கும் வடகிழக்கு பருவ மழை!

கோவை: தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் விடைபெறும் நிலையில், அக்., 20 முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, வேளாண் பல்கலை
பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தில், ஜூன் மாதம் முதல் செப்., வரை தென்மேற்கு பருவ மழை; அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளது. தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் எதிர்பார்க்கப்பட்ட மழையை காட்டிலும், 50 சதவீதம் கோவையில் கூடுதலாகவே பதிவாகியுள்ளது.ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் சார்பில், பருவமழை கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.