நாளை ஆசிரியர் தினம்

சென்னை:ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசு சார்பில், 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாற்று திறனாளிகள்அதன்படி, நாளை ஆசிரியர் தினம் என்பதால், தமிழக அரசின் சார்பில், இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருது, 377 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், 165 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த, 165 ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும், 32 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை சேர்ந்த, இரண்டு ஆசிரியர்கள் மற்றும் மாற்று திறனாளி கள் மூன்று பேர் என, மொத்தம், 367 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.விழாமேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட கல்வியியல் பயிற்சி நிறுவனங்களின் பேராசிரியர்கள், 10 பேருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

சென்னையில், 11 பேர் நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நாளை பிற்பகல், 2:00 மணிக்கு நடக்கிறது. பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் தலைமையில், அமைச்சர்கள், செங்கோட்டையன், ஜெயகுமார், பாடநுால் கழக தலைவர், வளர்மதி மற்றும் பள்ளி கல்வி இயக்குனர்கள், திட்ட இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், செய்து வருகிறார்.