காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா? உங்களுக்கான அதிர்ச்சி எச்சரிக்கை!

காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா? உங்களுக்கான அதிர்ச்சி எச்சரிக்கை!
முன்பெல்லாம் கோழி இறகை எடுத்து காதில் விட்டு குடைந்துக் கொண்டே ஆகா என்ன சுகம் என்று கிராமங்களில் சொல்வார்கள். இப்போது கோழிகளை எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடையில் பார்ப்பதோடு சரி என்றாகிவிட்டது.தற்போது மக்களிடையே சுத்தம் சுகாதாரம் என்று ஸ்டைலாக பட்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு காது குடைகிற பழக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சிலர் கைகளில் அந்த நேரத்தில் சிக்கும் பேனா, பென்சில், பேப்பர் என்று எதையாவது எடுத்து காது குடைந்து வருகிறார்கள்.
 
இந்தியாவில் மக்களை தாக்கும் நோய்களை நாம் பட்டியலிடும் நேரத்தில் மக்களே தேடிப் போய் சிக்கிக் கொள்ளும் நோய்களின் பட்டியலை நாம் எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம். நமது காதில் குழாய் பகுதியில் செல்கள் உள்ளன. காதுப் பகுதி மிகவும் மிருதுவானது. அவற்றைக் கெடுக்கும் வகையில் மென்மையான அழுத்தத்தை கொடுத்தாலே காதில் வலி அதிகம் ஏற்படுகிறது மற்றும் காதுகளிலிருந்து திரவம் வடிதல் போன்றவை காணப்படும். இவை சிலருக்கு சிறிது நேரத்தில் சரியாகலாம் சிலருக்கு செவித்திறன் இழக்க நேரிடலாம்.
 
இதனால் காது அடைப்பு ஏற்படுவதால் பேனா, பென்சில்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது ஆபத்துகள் தான் அதிகம் இருக்கின்றன. இவ்வளவு ஆபத்துகள் என்றால் அதை எவ்வாறு சுத்தம் செய்வது.நாம் சுத்தம் செய்ய கவலைப்பட வேண்டாம். நாம் தலைக்கு குளிக்கும் போதோ அல்லது நமது தலை ஈரமாக இருக்கும் போதோ நம் காதுக்குள் இருக்கும் அழுக்கு இயற்கையாகவே வெளியே வந்து விடும். அல்லது அந்த மாதிரி ஈரமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு துணியால் துடைத்தால் போதும்.
சில நேரங்களில் காதில் உள்ள அழுக்குகள் நாம் உறங்கும் நேரத்தில் அதுவாகவே வெளியே வந்துவிடும். ஒரு சிலருக்கு காதுகளில் அதிகமாக அழுக்குகள் சேரும். அவர்களுக்கு இந்த இரு வழிகளும் பயனளிக்காது. அந்த சமயத்தில் கட்டாயம் மருத்துவரை அணுகி பயன்பெறலாம்.