எளிமையான திருமணம் .! கையில் இருந்த 40 ஆயிரம் ரூபாயை கூட பள்ளிக்கே வழங்கிய ஆசிரியர்..





காஞ்சிபுரம் அருகே உள்ள மதுராந்தகத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப பள்ளியில் வேலை செய்துவரும் ஆசிரியர் விக்னேஸ்வரனுக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இவருடைய திருமணத்தை முன்னிட்டு, தான் வேலை செய்த பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த ஆசிரியர் விக்னேஸ்வரன் 40 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிவாசலில் இரும்பு கேட் செய்து கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பள்ளியின் ஒரு பக்க சுவர் மிகவும் மோசமாக இருந்ததால் அதனையும் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் பெரும் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் புகைப்படத்தை பரிசளித்து பள்ளி மாணவர்களுக்கு எளிதாக பாடம் கற்கும் வகையில் நன்மைகளை செய்து உள்ளார் விக்னேஸ்வரன்.
 
இவருடைய இந்த செயலை பாராட்டி மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோர்களும் அவ்வூர் மக்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆசிரியரின் இந்த அற்புத செயலுக்கு மற்ற ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்ததுடன் தங்களுக்கும் ஆசிரியரின் செயல்  ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளனர். இது தவிர 25 ஆயிரம் வித பந்துகளை உருவாக்கி அவ்வூரிலுள்ள சமூக ஆர்வலர்களிடம் கொடுத்து மரம் இல்லாத பல்வேறு பகுதிகளில் விதைகளை தூவ வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார் ஆசிரியர் விக்னேஷ்.
ஆசிரியர் விக்னேஷின் இந்த அற்புத செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.