சென்னை: இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குடியரசுத் தினம் எப்போது என்ற கேள்விக்கு சரியான பதிலே வினாத்தாளில் இல்லை. இதேபோல் இன்று நடந்த குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறாக இருந்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்திய குரூப் 4 தேர்வில் 122 கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்துக வடிவில் கேட்கப்பட்ட இந்த கேள்வியில் (டி) என்ற பதிவில் குடியரசு தினம் என்ற கேள்விக்கு சரியான பதிலே இல்லை. இந்த கேள்விக்கு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி என்பதே சரியான விடையாகும்.ஆனால் அளிக்கப்பட்ட நான்கு விடைகளில் அது இடம்பெறவில்லை.
இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
அதேநேரம் ஆங்கிலத்தில் 4வதாக dissolution of the 1st lok sabha என்று கேட்கப்பட்டுள்ளது. அதாவது முதலாவது லோக்சபா (மக்களவை) கலைக்கப்பட்ட தேதி. இதற்கு விடை தான் 4 ஏப்ரல் 1947 ஆகும். பதிலை சரியாக தமிழில் கொடுத்துவிட்டு கேள்வியை தவறாக கேட்டுள்ளார்கள்.
குரூப் 4 தேர்வு நிறைவு.. சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள்.. வினாக்களுக்கான உத்தேச விடைகள் எப்போது?
இதேபோல் மொத்தம் ஐந்து கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகளில் அண்மைக்காலமாக கேள்விகள் தவறுதலாக கேட்கப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.