பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்

சென்னை, பிளஸ் 1 பிளஸ் 2 பொது தேர்வுக்கு புதிய பாட குறியீடுகள் வழங்கப்பட்டு
உள்ளன. குறியீட்டு எண்ணை சரியாக பயன்படுத்துமாறு பள்ளிகளுக்கு தேர்வு துறை அறிவுறுத்தி உள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு பொது தேர்வுக்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுஉள்ளது. இதன்படி மாணவர்களின் விபரங்கள் மாவட்ட வாரியாக, பள்ளி வாரியாக ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு பிளஸ் 2வுக்கு புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.இதில் பல புதிய பாடங்கள் இணைக்கப் பட்டுள்ளன. அவற்றுக்கு பாட குறியீட்டு எண்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்த பொது தேர்வில் 39 பாடங்களுக்கு கருத்தியல் என்ற 'தியரி' தேர்வும்; 12 பாடங்களுக்கு செய்முறை தேர்வும் நடத்தப் படுகின்றன. அதேபோல் மொத்தம் 41 பாட பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப் பட்டுள்ளனர்.பாடங்கள் மற்றும் பாடப் பிரிவுகளின் விபரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வு துறையால் அனுப்பப் பட்டுள்ளன. பாட குறியீட்டு எண்களை பிழையின்றி பயன்படுத்துமாறு பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.