சென்னை, பிளஸ் 1 காலாண்டு தேர்வு வினாத்தாள் 'லீக்' ஆனதால் பள்ளிக்கல்வி
அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செப். 12 முதல் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழக பள்ளி கல்வி துறையால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.இதில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு காலையிலும் பிளஸ் 1க்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில் வினாத்தாள் தினமும் காலையில் வழங்கப்படுகிறது. பிற்பகலில் நடக்கும் தேர்வுக்கும் காலையிலேயே வினாத்தாள் வழங்கப்படுகிறது.குறைந்த அளவு வினாத்தாளே வழங்கப்படுவதால் பள்ளிகள் தரப்பில் அவற்றை நகல் எடுத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் 'ஜெராக்ஸ்' கடைகளில் பிரதி எடுக்கின்றனர்.இந்நிலையில் பிளஸ் 1க்கு நேற்று பிற்பகலில் நடந்த கணினி அறிவியல் தேர்வு வினாத்தாள், நேற்று முன்தினம் வணிகவியல் தேர்வு வினாத்தாளும் வெளியாகிள்ளது.இவைகள் கோவை மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.