Jio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி?


கடந்த வாரம் நடைபெற்ற ஜியோ நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் புதிய ஆஃபர்கள், சேவைகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்வின் போது, வெகுநாட்களாக காத்துக் கொண்டிருந்த ஜியோ ஜிகாஃபைபரின் பயன்பாடு எப்போதில் இருந்து துவக்கம் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது.
வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி முதல் இந்த ஜியோ ஜிகாஃபைபர் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மாதாந்திரக் கட்டிணம் பயன்பாட்டினைப் பொறுத்து ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும். லேண்ட் லைன் கனெக்சன் மற்றும் டிவி செட்-ஆப் பாக்ஸூடன் வர இருக்கும் இந்த சேவையை ஒரு வருடம் வரை ரிஜிஸ்டர் செய்து பெற்றால் ஒரு எல்..டி.
 
டிவி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலருக்கு இதனை எப்படி பதிவு செய்து பெற வேண்டும் என்று தெரியவில்லை.
மேலும் படிக்க : இந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்..டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி - ஜியோவின் புதிய அறிவிப்பு
Reliance Jio GigaFiber broadband connection registration process
Jio Fiber website என்ற வெப்சைட்டிற்கு செல்லவும்
அதில் இருக்கும் மூன்று படிநிலைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து நீங்கள் இந்த இணைப்பை பெற்றுக் கொள்ள இயலும்.
ஒரே கேபிளில் டிவி, லேண்ட்லைன், மற்றும் இணைய வசதிகளை தரும் இந்த சேவையை ரெஜிஸ்டர் செய்ய உங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை தேவைப்படும்.
உங்களின் போன் நம்பரை உள்ளீடாக கொடுத்துவிட்டால் உங்களின் போனுக்கு ஒரு .டிபி. வரும்.
அந்த .டி.பி.யை உள்ளீடாக கொடுத்து மீண்டும் ஒரு முறை உங்களின் முகவரி, மேப்பில் சரியான இடம், பின் கோடு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதில் நீங்கள் எந்த மாதிரியான இல்லத்தில் வாழ்கின்றீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். அப்பார்ட்மெண்ட்கள், சொசைட்டி, தனி வீடுகள் என்பதை குறிப்பிட வேண்டும்.
இவை அனைத்தும் முடிவுற்ற பிறகு, ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் உங்களை அழைத்து பேசுவார். அதன் பின்பு, இருவருக்கும் சரியான நேரம் ஒன்றில் உங்களின் வீட்டில் இன்ஸ்டாலேசன் செய்து கொடுக்கப்படும். அந்த ப்ரோசசின் போது உங்களின் அடையாள அட்டைகளை நீங்கள் உங்கள் கையில் வைத்திருப்பது நலம்.