Jio Fiber: ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர், ஜியோ செட் டாப் பாக்ஸ் அறிமுகம்





வரும் செப்டம்பர் 5, 2019 தேதி முதன்முறையாக ஜியோ ஃபைபர் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் 100 mbps வேகத்தில் தொடங்குகின்ற பிளான் கட்டணம் விலை ரூ. 700 முதல் ரூ.10,000 வரை மாதந்திர கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
ஜியோ ஃபைபரின் சேவைக்கான முன்பதிவில் சுமார் 1.5 கோடி ஹோம் பிராட்பேண்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஜியோ 2 கோடியாக உயர்த்தவும், 1.5 கோடி நிறுவனங்கள் சார்ந்த சேவையை வழங்க சுமார் 1600 நகரங்களில் ஜியோவின் ஃபைபரை தொடங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜியோவின் ஃபைபர் வருடாந்திர பிளானை தேர்நெடுப்பவர்களுக்கு அறிமுக ஆஃபர் மூலமாக 4கே எல்இடி டிவி மற்றும் 4கே செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பட்ஜெட்டிற்கும், ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்றதாக விளங்கும் வகையில் ஜியோ ஃபைபர் திட்டங்களின் விலை ரூ. 700 மற்றும் ரூ. 10,000, எந்தவொரு இந்திய ஆபரேட்டருக்கும் (மொபைல் அல்லது நிலையான) வீட்டிலிருந்து குரல் அழைப்புகள் இலவசமாக இருக்கும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜியோ ஃபைபரின் மூலம் பெரும்பாலான முன்னணி OTT சேவைகளான நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார், வூட் உள்ளிட்ட சேவைகள் பன்டில் ஆஃபராக வழங்கப்பட உள்ளது. கூடுதலாக ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் ( Jio Postpaid Plus) மூலம் புதிய போஸ்ட்பெயிட் அனுபவத்தை வழங்க சேவை, டேட்டா குடும்ப உறுப்பிணர்களுடன் பகிரும் திட்டங்கள், சர்வதேச ரோமிங் மற்றும் தொலைபேசி சார்ந்த அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கும். இந்த கட்டணங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் ஜியோ.காம் மற்றும் மைஜியோ பயன்பாட்டில் செப்டம்பர் 5 ஆம் தேதி கிடைக்கும்.
 
ஜியோ பைபர் ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) வதி ஜனவரி 1, 2020 முதல் வணிக ரீதியாகக் கிடைக்கும் என்றும் அம்பானி குறிப்பிட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில், இந்தியாவில் 2 பில்லியன் கனெக்ட்டிவிட்டி ஐஓடி சாதனங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஜியோ நிறுவன இலக்கு 1 பில்லியனுக்கும் அதிகமான IoT சாதனங்களில் இந்தியாவில் வீடு, நிறுவனங்கள் சேவைகளிலிருந்து வருவாயைப் பெற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜியோ செட்டாப் பாக்ஸ்
 
இந்த உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஜியோ நிறுவன சிகனல்களை பெற்று கேபிள் டிவி வாயிலாக இணைக்கும் நோக்கில் ஜியோ செட்டாப் பாக்ஸ் சேவை இயங்கும். புதிய ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் சேவையின் மூலம் ஷாப்பிங், கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் சினிமா துறையில் படங்கள் ( Jio First-Day-First-Show) திரையிடும் நாள் அன்றைக்கு சினிமாவை ஜியோவின் மூலம் காணும் முறையை 2020 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்க உள்ளது.
குறைவான விலையில் பல்வேறு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு உட்பட பல்வேறு அம்சங்களை வழங்கும் Jio HoloBoard பெயரில் ரியாலிட்டி ஹெட்செட்டை ஜியோ வெளியிட உள்ளது.