Flash News -மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் பணிக்கொடை ? அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

*CPS ல் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்*


*புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 1.4. 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு  இதுநாள் வரை பணிக்கொடை வழங்கப்படாத நிலை உள்ளது.*



*மத்திய அரசு ஊழியர்களுக்கும் பிற மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் பணிக்கொடை வழங்குகின்றனர்.*

*ஆனால்,*

 *தமிழக அரசு சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்து இதுநாள்வரை எவ்வித அறிவிப்போ, அரசாணையோ, விதிமுறையோ  வரையறை செய்யவில்லை.*



 *இந்நிலையில் சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. பரிமளா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தங்களுக்கான பணிக்கொடையை வழங்கக்கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.*

*இவ்வழக்கு இன்று (30.08.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.*

*அரசு தரப்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை பணிக்கொடை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.*



*இது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு  நீதியரசர் வழக்கினை 6 வாரங்களுக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.*

 *இதேபோல தமிழகத்தில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சிபிஎஸ் திட்டத்தில் பணி ஓய்வு பெற்று உள்ளவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும்போது இவர்களுக்கு பணிக்கொடை கிடைக்க வாய்ப்புள்ளது.*

 *எனவே சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வழக்கு தொடுக்கும் பொழுது பணிக்கொடை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.*

 *எனவே, ஒன்றுபட்டு வழக்கு தொடுப்போம்.*

 *பணிக்கொடை பெற முயற்சி மேற்கொள்வோம்.*


 *ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்*.