ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்

சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர்கள் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள், ஆகஸ்ட், 20ல் வெளியிடப்பட்டன. முதல் தாளை, 1.62 லட்சம் பேர் எழுதியதில், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வில், அதை விட குறைந்த தேர்வர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதல் தாளுக்கான மதிப்பெண் பட்டியல், ஆகஸ்ட், 23ல் வழங்கப்பட்டது. இரண்டாம்தாளுக்கு, இன்று மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. அப்போது, சரியாக எவ்வளவு பேர், தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர் என்ற விபரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.