சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் பல மடங்கு உயர்வு

புதுடில்லி:மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கான, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், 24 மடங்கு அதிகரித்து
உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ மாணவர்களுக்கான, கல்வி கட்டணங்களை மாற்றி, சி.பி.எஸ்.இ., கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அது தொடர்பான விபரம்:l பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், எஸ்.சி. - எஸ்.டி., மாணவர்களுக்கான, ஐந்து பாடங்களுக்கான தேர்வு கட்டணம், 500 ரூபாயிலிருந்து, 1, 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தை விட, 24 மடங்கு அதிகம்l பொதுப் பிரிவு மாணவர்கள் செலுத்தி வந்த, 150 ரூபாய் கட்டணம், 1, 200ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுl எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், ஐந்து பாடங்களுக்கு மேல், கூடுதல் பாடங்களை எழுத, இதுவரை கட்டணம் இல்லை. இப்போது, அது, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுl பொதுப் பிரிவு மாணவர்கள், ஒரு பாடத்திற்கு, ௧௫௦ ரூபாய் செலுத்தி வந்த நிலையில், இப்போது, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுl கட்டணம் செலுத்துவதில் இருந்து, 100 சதவீதம் பார்வையற்ற மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுl மாணவர்கள் இடம் மாறும் போது, 150 ரூபாயாக இருந்த கட்டணம், 300ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுl வெளிநாடுகளில் உள்ள, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், 5000ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுl தேர்வு கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாதவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.