மாணவர்கள் ஆங்கிலம் கற்க 2,000 வார்த்தைகளை கொண்ட சிடி வழங்கப்படும்: செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசும் வகையில் விரைவில் 2000 ஆங்கில வார்த்தைகளை கொண்ட சிடி வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. க்யூ.ஆர் மூலமாக மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்கள் சரளமாக பேச வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுதவிர, 2000 ஆங்கில வார்த்தைகளை கொண்ட சி.டி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிக்கூடங்களில் அவுட்டோர் ஸ்டேடியம் மத்திய அரசின் அனுமதியுடன் ரூபாய் இரண்டரை கோடி செலவில் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்