102 கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

கோவை:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்ககம் மற்றும் அண்ணா மேலாண்மை நிலையம் ஆகியவை இணைந்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும்
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சியை அளிக்க உள்ளது.

வரும், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடக்கும் பயிற்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதில், முதன்மை கல்வி அலுவலர்கள், 30, பேர், மாவட்ட கல்வி அலுவலர்கள், 72 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.மாணவர் சேர்க்கை விபரம், பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் குறித்த அடிப்படை வசதி, விளையாட்டு மைதானங்கள் குறித்து, அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.எனவே, மேற்கண்ட விபரங்களுடன், பயிற்சிக்கு வர வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.