மதுரை: பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரதிதேவியை, அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் வகுப்பறைக்குள் நுழைந்த குரு முனீஸ்வரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரதி தேவியை கண்மூடித்தனமாக குத்தினார்.
இதில், 8ஆம் வகுப்பு ஆசிரியை ரதிதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், முனீஸ்வரனைக் கைது செய்தனர். ரதி தேவியின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.