அரசுப் பள்ளி பயோ மெட்ரிக்கில் இந்தி சேர்ப்பு - தமிழ் புறக்கணிப்பு?

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.
பயோ மெட்ரிக் இயந்திரத்தில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டும் விவரங்கள் பதிவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மீண்டும் பழைய முறைப்படியே பயோமெட்ரிக் மாற்றியமைத்து, தமிழை சேர்க்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.