இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருசெங்கோட்டையன் அவர்கள் ஊடகத்திற்கு அளித்தபேட்டியில் 2017 - 18 கல்வியாண்டில் படித்தமாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் கணினிவழங்கப்படும் எனவும், தற்போது படித்து வரும்பதினோராம் வகுப்பு மற்றும் 11ம் & 12 ம் வகுப்புமாணவர்களுக்கு கியூ ஆர் கோட் பயன்படுத்திபாடங்களை படிக்க வேண்டி இருப்பதால்உடனடியாக கணினி வழங்கப்பட்டுள்ளது எனவும்தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள புதிய பாடதிட்டத்தை முழுமையாக படித்து முடிக்க 240நாட்கள் தேவைப்படும் எனவும் அதனை பள்ளிசெயல்படும் 220 நாட்களுக்குள்ளாக பயின்றுமுடிக்க இந்த கணினிகள் அவர்களுக்கு பயன்படும்எனவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளிக் கல்வித்துறையின் புதியஅறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் எனநிருபர்கள் கேட்டதற்கு அடுத்த இரண்டுநாட்களுக்கு பிறகு மாண்புமிகு முதலமைச்சர் திருஎடப்பாடி அவர்கள் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் மிக முக்கிய அறிவிப்புகளைவெளியிடுவார் என வும் பேட்டியளித்தார்.
*புத்தகங்கள் இதுவரை முழுமையாக வழங்காததுகுறித்து எந்த நிருபரும் கேள்வி எழுப்பாததுஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது...*