பயோ மெட்ரிக் வருகை பதிவு சீராக இல்லை

உடுமலை கல்வி மாவட்டத்தில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும்மேல்நிலைப்பள்ளிகள் உள்ளனஇப்பள்ளிகளில் பள்ளி நேரத்தில்,மாணவர்களுக்கு முன்பாக ஆசிரியர்கள் இருக்க வேண்டுமென, 'பயோமெட்ரிக்', முறை செயல்படுத்தப்பட்டது.

ஆசிரியர்கள் மட்டுமின்றிஅலுவலர்களும்இம்முறையில் வருகைப்பதிவுசெய்ய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.ஆசிரியர்களுக்குஇந்ததொழில்நுட்பத்தை பயன்படுத்திகைவிரல் ரேகை வைப்பதற்குபயிற்சிவழங்கப்பட்டது.

இதற்குஅனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் வசதி உட்பட அனைத்தும்சரிபார்க்கப்பட்டுகருவிகள் பொருத்தப்பட்டனகல்வியாண்டின் துவக்கம்முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதுஇந்த நடைமுறையில்,ஆசிரியர்கள்குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நிமிடம் தாமதித்தாலும், 'தாமதம்', என்ற கணக்கில் பதிவாகி விடுகிறது
  
.மூன்று முறைக்கு மேல்தொடர்ந்து பதிவில் தாமதம் ஏற்பட்டால்'ஆப்சென்ட்', ஆக பதிவாகிறது

கல்வியாண்டு துவங்கியது முதல்ஆசிரியர்கள் இதில் பதிவு செய்துவருகின்றனர்ஆனால்சில நாட்கள், 'நெட்ஒர்க்கிடைக்காமல் போவதுமற்றும் 'சர்வர்பிரச்னையால்பதிவு மேற்கொள்ள முடிவதில்லை என,புகார் தெரிவித்துள்ளனர்.

தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' வாரம் ஒருமுறைஅந்தந்தபள்ளிகளுக்கு அவர்களுக்கான வருகைப்பதிவுகள் குறித்து தகவல்அனுப்பப்படும் எனதெரிவிக்கப்பட்டது.

ஆனால்எதுவும் அனுப்பப்படவில்லைசர்வர் வேலை செய்யும் போதுபதிவு செய்வதில் சிக்கல் இல்லைசில நாட்கள்தொழில்நுட்பபிரச்னையால்பதிவேடுகளில் மட்டுமே வருகை குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த நாட்கள்இணையதளத்தில் எவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது என்பதுகுறித்துகல்வித்துறையிலிருந்தும் எந்த தகவல்களும்அனுப்பப்படவில்லை.

எந்த நாட்கள் தாமதமாகியுள்ளது என்பதும்பதிவுகள் வழங்கப்பட்டபின்னரே அறிய முடியும் என்பதால்ஆசிரியர்களுக்கான விடுப்புஎடுக்கவும் அச்சத்தில் உள்ளனர்,'' என்றார்.