அரசு
பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 அடுக்கு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த குழுக்கள் அரசு பள்ளிகளில் 20 உறுப்பினர்களை கொண்ட மேலாண்மைக்குழு அமைத்திட வேண்டும் என சுடலைக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.