இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்; கட்டணம் செலுத்தும் வசதி துவக்கம்

சென்னை : இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், கட்டணம் செலுத்தும் வசதி துவங்கியது.


அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்கு, ஆன்லைன் வழி கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு, ஏற்கனவே தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை, நேற்று துவங்கியது. முதல் சுற்றில், பங்கேற்க தகுதி பெற்றுள்ள, 9,872 பேர், கவுன்சிலிங்குக்கான கட்டணத்தை, ஆன்லைன் வழியே செலுத்தலாம். இதற்கான வசதி நேற்று துவங்கப்பட்டது.வரும், 10ம் தேதி வரை, கட்டணம் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, www.tneaonline.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.