எம்.பி.ஏ.,- எம்.சி.ஏ., படிப்பு இன்று முதல் விண்ணப்பங்கள்

கோவை,:''எம்.பி.ஏ., மற்றும், எம்.சி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்,'' என, கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை அரசு
தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர், தாமரை தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லுாரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.விண்ணப்பதாரர்கள், எம்.பி.ஏ., மற்றும், எம்.சி.ஏ., முதுநிலை பட்டப் படிப்புக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இன்று முதல், ஆக., 3 வரை, www.gct.ac.in/www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில், விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள், 300 ரூபாய்க்கான, 'டிடி'யை, 'செயலர், தமிழ்நாடு, எம்.பி.ஏ., - -எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை - 2019-, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை- -13 என்ற பெயரில், பதிவுக் கட்டணமாக எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான பதிவுக் கட்டணம், 150 ரூபாய்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன், ஆக., 3ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் தாமரை கூறுகையில், ''விண்ணப்பதாரர்கள், www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.''ஆக., 11ல், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஆக., 17 முதல், 21 வரையும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, ஆக., 22 முதல், 28 வரையும் கலந்தாய்வு நடக்கிறது,'' என்றார்.