இன்ஜி., கவுன்சிலிங்: 26 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மூன்றாம் சுற்றில், 26 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' ஜூலை, 3 முதல் நடந்து வருகிறது.

முதல் இரண்டு சுற்றுகளுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. மூன்றாம் சுற்று மாணவர்களுக்கான உத்தேச ஒதுக்கீட்டு பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.இதில், 26 ஆயிரத்து, 318 பேருக்கு உத்தேசமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை, மாணவர்கள் பார்த்து, ஆன்லைனில் ஒப்புதல் அளித்து, இடங்களை உறுதி செய்ய வேண்டும்.இன்று மாலை, 5:00 மணிக்குள் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. நாளை, இறுதி பட்டியல் வெளியாகும். மூன்றாம் சுற்று வரை, 47 ஆயிரத்து, 850 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள, 1.72 லட்சம் இடங்களில், நான்காம் சுற்றிலும் சேர்த்து, 72 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மீதி, 1 லட்சம் இடங்கள் காலியாகும் வாய்ப்புஉள்ளது.