பிளஸ் 1 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை,பிளஸ் 1 துணை தேர்வுக்கான முடிவுகள் இன்று பிற்பகலில்
அறிவிக்கப்படுகிறது.மார்ச்சில் நடத்தப்பட்ட பிளஸ் 1 பொது தேர்வில் பங்கேற்று சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு மேல் வெளியிடப்படுகிறது.தேர்வர்கள் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்த்து தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் நாளையும் வரும் 22ம் தேதியும் முதன்மை கல்வி அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார்.