Click here view Tentative key
சென்னை துறை தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 147 துறை தேர்வுகள் ஜூன் 8 முதல் 15ம் தேதி வரை சென்னை புதுடில்லி உள்பட 33 தேர்வு மையங்களில் நடந்தது. உத்தேச விடை குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.உத்தேச விடைகள் குறித்து மறுப்புகள் இருந்தால் உரிய ஆதாரங்களுடன் ஜூன் 22 முதல் 28 வரை இணையதளத்தில் தெரிவிக்கலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அறிவித்துள்ளார்