நடுங்க வைக்கும் 'நிபா வைரஸ்'

கேரளாவை 'நிபா' வைரஸ், மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 'என்.ஐ.வி. தொற்றுநோய்' என்றும் அழைக்கப்படுகிறது.




பழங்கள்:
பழந்தின்னி வவ்வால்கள் சாப்பிட்ட பழங்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.


பனை வகை:
ஈச்ச மரம், பேரீச்சை மரம், தென்னை மரம் உள்ளிட்ட பனை குடும்ப மரங்களில் கட்டப்படும் கள் பானை மற்றும் மரத்தின் பழங்களை வைரஸ் ஏந்திய வவ்வால்கள் நுகர்வதால், மரங்களின் காய்ப்புகளை சாப்பிடும் மனிதர்களுக்கு பரவுகிறது.


விலங்குகள்:
'நிபா வைரஸ்' தாக்கிய வவ்வால்கள் சாப்பிட்ட பழங்கள் மற்றும் அதன் கழிவுகள் மூலம் பன்றி, ஆடு,பூனை, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் பரவுகிறது. இவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.


மனிதர்கள்:
பாதிக்கப்பட்ட மனிதர்களின் எச்சில், பயன்படுத்திய தண்ணீர் உள்ளிட்ட உணவுகள் மூலம், மற்றொருவருக்கு பரவுகிறது.


அறிகுறி:
* காய்ச்சல்
* தலைவலி
* உடல் சோர்வு
* மூளையில் வீக்கம்
* வலிப்பு
* கோமா


தடுக்கும் முறை:
* வைரஸ் தாக்கிய பறவைகள் மற்றும் விலங்குகள் சாப்பிட்ட பழங்களை சாப்பிடக் கூடாது
.* பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்க நேர்ந்தால், கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
* முகத்தில் மாஸ்க் மற்றும் கையுறை அணிய வேண்டும்.


சிகிச்சை:
* இதற்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
* பாதிக்கப்பட்டவர்களை தீவிர சிகிச்சை மையம் மூலம் தனிமைப்படுத்திய சிகிச்சை வழங்கப்படுகிறது.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சில ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று, இந்த மருந்துகளை சாப்பிடலாம். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


வரலாறு:
* முதன்முறையாக 1999ல் மலேஷியாவில் கம்பாங் சுங்காய் நிபா என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. வைரஸ் பாதிக்கப்பட்ட பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவியது.
* இந்தியாவில் முதன்முதலில், 2001ல் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டனர்.
* பின் 2001-2007வரை வங்கதேசத்தின் பெரும்பாலான இடங்களிலும் பரவியது.
* கேரளாவில் 2018ல் 'நிபா' வைரசால் 17 பேர் பலியாகினர்.