ஆசிரியர் தகுதி தேர்வு இன்று இரண்டாம் தாள்

சென்னை:ஆசிரியர் தகுதிக்கான, இரண்டாம் தாள் தேர்வு, இன்று நடக்க உள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம்
நடத்த, 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தேர்வு நடத்தப்படுகிறது.

ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்க, ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த, இரண்டாம் தாள் தேர்விலும், தேர்ச்சி பெற வேண்டும். நேற்று, 471 மையங்களில், முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுத, இரண்டு லட்சம் பேருக்கு, அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.காலை, 10:00 முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய பலர், தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். இன்று, 1,081 மையங்களில், இரண்டாம் தாள் தேர்வு நடக்க உள்ளது. நான்கு லட்சம் பேர், தேர்வை எழுத உள்ளனர்.