'நிபா வைரஸ்' அறிகுறி: ஜிப்மரில் ஒருவர் 'அட்மிட்'

புதுச்சேரி : 'நிபா வைரஸ்' அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கடலுாரைச் சேர்ந்தவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளா
மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது.புதுச்சேரி பிராந்தியமான மாகி கேரளாவையொட்டி அமைந்துள்ளதால் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. கேரளாவில் பணிபுரிந்து வரும் கடலுாரைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் கடும் காய்ச்சல் காரணமாக 10ம் தேதி ஜிப்மர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை பரிசோதித்த போது நிபா வைரஸ்அறிகுறிகள் தென்பட்டதால் உடனடியாக தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.