ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வு: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியின் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

200 எம்பிபிஎஸ் இடங்களுக்கான நுழைவுத் தேர்வானது, 25 மாநிலங்களில் உள்ள 280 மையங்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.
இந்த தேர்வில் நாடு முழுவதிலுமிருந்து 1,84,272 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.