கூடுதல் மருத்துவ இடங்கள் விண்ணப்பிக்க அவகாசம்

கோவை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான கூடுதல் மருத்துவ இடங்களுக்கு
விண்ணப்பிக்க, மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில், கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.மத்திய அரசின் புதிய சட்டப்படி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்மூலம், முன்னேறிய பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்.மருத்துவ படிப்பில் மட்டும், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், கூடுதலாக, 25 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும், அதற்கான விண்ணப்பங்களை, ஜூன், 7ம் தேதிக்குள் அனுப்ப, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், பல மருத்துவக் கல்லுாரிகளும், காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்தன. இதை ஏற்றுக்கொண்ட கவுன்சில், நாளை வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது.