தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிபடியாக குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது இது நாள் வரையில்
அதிகபட்சமாக, திருத்தணியில் தலா 112 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், அக்னி நட்சத்திரக் காலம் மே 29-ஆம் நிறைவடைந்தது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், சென்னையிலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வங்க கடலின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால், இதன் காரணமாக, காற்று தமிழகத்தின் உள்பகுதியை நோக்கி வரும் என்பதாவ் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கும் என தெரிவித்துள்ளது.