சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை முடிகிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், அரசு
மற்றும் தனியார் இன்ஜி., கல்லுாரிகளுக்கு, கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கவுன்சிலிங்கை நடத்த உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கி, 31ல் முடிந்தது.இதில், 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 7ல் துவங்கியது; நாளை முடிகிறது.ஒதுக்கப்பட்ட நேரத்தில் வர முடியாதவர்களுக்காக, நாளை பிற்பகலில், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 17ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.வரும், 20ம் தேதி முதல், சிறப்பு பிரிவினருக்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும், ஜூலை, 3 முதல், 'ஆன்லைன்' பொது கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.